Connect with us

இந்தியா

ஆள்மாறாட்டம், பல லட்சம் கைமாறல்: நீட் தேர்வில் நூதன மோசடி!

Published

on

சமீபத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது உள்ளிட்ட பல முறைகேடுகள் ராஜஸ்தான், பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் டெல்லி மற்றும் மற்றும் ராஞ்சியில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மிகப் பெரிய மோசடி செய்யப்பட்டு இருப்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனை கண்டுபிடித்து அதிகாரிகள் அதற்கு மூளையாக செயல்பட்ட நாக்பூர் தனியார் பயிற்சி நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது கும்பல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மராட்டிய மாநிலம் நாக்பூரில் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையம் இந்த முறைகேடுகளுக்கு பிறப்பிடமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த மையத்தின் உரிமையாளர் இந்தியாவில் உள்ள புகழ்ப்பெற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக மாணவர்களிடம் தலா 50 லட்ச ரூபாய் பெற்றதை சிபிஐ அம்பலப்படுத்தியுள்ளது.

அத்துடன் நீட் தேர்வுக்கான விடைகளை முன்கூட்டியே தருவதாகவும், விடைத்தாள்கள் எந்த மையத்தில் இருந்தாலும் அந்த மையத்தில் வைத்து அதை திருத்தி அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தருவதாக கூறி பயிற்சி நீட் தேர்வு மைய உரிமையாளர் பல லட்ச ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ள மாணவர்கள் மட்டுமல்லாது அவர்களது பெற்றோரையும் சந்தித்து ஆசை வார்த்தை கூறி பல லட்ச ரூபாய் வசூலித்த அந்த நீட் பயிற்சி நிலைய உரிமையாளர், பணத்தை ரொக்கமாக வாங்காமல் பல மாதங்கள் முன் தேதியிட்டு காசோலையாக வாங்கிக்கொள்வார் என்றும், அதற்கு இணையாக மாணவரின் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழை வாங்கி வைத்துக் கொள்வார் என்றும், பணம் கைக்கு வந்தவுடன் அவற்றை திரும்ப கொடுத்துள்ளார் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நீட் தேர்வெழுதும் மாணவர்களின் அடையாள அட்டையில் மாற்றம் செய்த பயிற்சி மைய உரிமையாளர் மற்றும் அவரது சகாக்கள் தாங்கள் ஏற்கனவே திட்டமிட்ட தேர்வு மையங்களில் குறிப்பிட்ட மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில் கச்சிதமாக திட்டத்தை தீட்டியது உறுதியாகியுள்ளது. மாணவர்களிடமிருந்து மெய்நிகர் ஆதார் அட்டை பெற்று போலி அடையாள அட்டை தயாரிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது. பணம் கொடுத்த மாணவர்களின் புகைப்படங்களை மிக்ஸிங் மற்றும் மார்பிங் செய்து அவர்களைப் போன்றே உள்ள ஏற்கனவே நீட் தேர்வில் வென்றவர்களுக்கு பெரும் தொகை கொடுத்து நியமித்தனர்.

கடந்த 9ஆம் தேதி டெல்லி சென்று அங்கு ஆள்மாறாட்ட தேர்வு நாடகத்தை கனகச்சிதமாக நடத்தியதும் பின்னர் தேர்வு முடிந்து அங்கிருந்து ரயிலில் நாக்பூர் திரும்பியதும் உறுதியாகி உள்ளது. அதன்படி டெல்லியில் 5 மாணவர்களை சிபிஐ தங்களது விசாரணை வளையத்தில் கொண்டு வந்துளனர்.

இந்த நிலையில் நீட் தேர்வில் மோசடி செய்தவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு, மராட்டியம், மேற்கு வங்கத்தில் எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வரும் நிலையில் மராட்டிய பயிற்சி மையம் ஒன்று நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!