இந்தியா

மாஸ்க்கில் மைக், வாட்ஸ் அப் மூலம் விடைத்தாள்: அதிர வைக்கும் நீட் மோசடி!

Published

on

ஒரு பக்கம் நீட் தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகளுக்கு சோதனை என்ற பெயரில் டார்ச்சர் கொடுக்கும் அதிகாரிகள் இருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவி விட்டு மோசடி செய்து நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெய்ப்பூர் பகுதியில் தினேஷ்வரி குமாரி என்ற மாணவி நீட் தேர்வு எழுத சென்றுள்ளார். அந்த மையத்தில் உள்ள இரண்டு கண்காணிப்பாளர்கள் நீட் தேர்வு வினாத்தாளை வாட்ஸ் அப் மூலம் புகைப்படம் எடுத்து வெளியே உள்ள நபருக்கு அனுப்பி உள்ளனர்.

அவர்கள் அந்த வினாக்களுக்கு உரிய விடைகளை தேர்வு செய்து மீண்டும் அதே நபருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியதாகவும், அதன் மூலம் அந்த மாணவி அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடையை எழுதியுள்ளதாக தெரிகிறது. இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டு மாணவி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதற்காக 30 லட்ச ரூபாய் கை மாறி இருக்கும் நிலையில் அந்த பணத்தையும் காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ஒரு மாணவி ஒருவர், என்95 மாஸ்க்கில் தொழில் நுட்ப கருவி ஒன்றை மறைத்து வைத்து காதில் ப்ளூடூத் ஹெட்செட் ஒன்று வைத்து வெளியில் உள்ளவர்கள் விடைகளை சொல்லச் சொல்ல அவர் எழுதியதாகத் தெரிகிறது. இந்த மாணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

வசூல்ராஜா திரைப்படத்தில் கமல்ஹாசன் தேர்வு எழுதுவது போல மோசடி செய்து தேர்வு எழுதிய மாணவ மாணவிகளும் அவருக்கு உதவியாக இருந்தவர்களையும் கைது செய்யப்பட்டதை அடுத்து ராஜஸ்தான் காவல்துறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Trending

Exit mobile version