தமிழ்நாடு

இன்று நீட் தேர்வு: அச்சம் காரணமாக மாணவர் தற்கொலை!

Published

on

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் நீட் தேர்வு எழுத பெரும் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று 11:30 முதல் 1:30 மணிக்குள் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையத்தின் உள்ளே சென்றுவிட வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நீட் தேர்வு எழுதும் மையங்களை நோக்கி மாணவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தைரியம் அளித்து வருகின்றனர் என்பதும் அச்சப்படாமல் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டு வரும் துரதிருஷ்டமான சம்பவங்களும் நடந்து வருகின்றன.

அந்த வகையில் இன்றும் நீட்தேர்வு அச்சம் காரணமாக ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்தது என்ற மாணவன் தனுஷ் இன்று நீட் தேர்வு என்ற அச்சம் காரணமாக திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அந்த மாணவரின் பெற்றோர் கதறி அழுத காட்சி காண்போரை கண்ணீர் வரவழைக்கும் வகையில் இருந்தது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் என்ற விவசாயியின் மகன் தனுஷ். இவர் இரண்டு முறை ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததாகவும் இந்த முறையும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சம் காரணமாக கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று காலை தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

நீட்தேர்வு அச்சம் காரணமாக மாணவர் தற்கொலை என்ற தகவல் அந்த பகுதியில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீட் தேர்வு யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் நீட் தேர்வை அனைவரும் தைரியமாக எழுத வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version