தமிழ்நாடு

நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டு எப்போது டவுன்லோடு செய்யலாம்?

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்காக நீட் தேர்வு வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் இதற்காக ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டு வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய தேர்வு முகமை இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்ய அனுமதித்தது என்றும் அதனால் இந்த முறையும் வரும் 9ஆம் தேதி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்திலிருந்து நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டு டவுன்லோட் செய்துகொள்ளலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ மாணவிகளுக்கு செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வுக்கான தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதற்காக கடந்த ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை விண்ணப்பம் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வுக்கு செல்லும் மாணவ மாணவிகள் எந்தெந்த பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது என்பது குறித்த விதிமுறைகள் ஏற்கனவே தெரிந்திருந்தாலும் தற்போது மீண்டும் ஒரு முறை அது குறித்து பார்ப்போம். நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ மாணவிகள் கைக்கடிகாரம், புத்தகங்கள், காகிதத் துண்டுகள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்கள் (செல்போன், ப்ளூடூத், ஹெட்போன், பேனா, உளவு கேமராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர், ஸ்டோரேஜ் டிவைஸ் ஆகிய பொருள்களை தேர்வு மையத்துக்கு எடுத்துச் செல்லக் கூடாது. அதேபோல் தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்தால் சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகள் விண்ணப்பம் ரத்து செய்யப்படும் என்றும் அதுமட்டுமின்றி 7 ஆண்டுகள் வரை நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல் இருக்கும் காரணத்தினால் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சமூக இடைவெளியுடன் நீட் தேர்வு எழுத தேசிய தேர்வு குழு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள் வழங்கப்படும் என்றும், உள்ளே செல்லவும் வெளியே செல்லவும் தனித்தனியாக பாதைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது என்பதும், நீட் தேர்வு மையங்களில் முறையான கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version