தமிழ்நாடு

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர்!

Published

on

தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா இயற்றப்பட்டது என்பதை அடுத்து அந்த மசோதாவிற்கு அனுமதி அளிக்குமாறு கவர்னருக்கு அனுப்பப்பட்ட நிலையில் அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாக அரசியல் கட்சிகள் விடுத்துவரும் நிலையில் இதுகுறித்து சமீபத்தில் திமுக ஆட்சி ஏற்பட்ட உடன் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு கவர்னர் அனுமதி அளிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் மற்றும் தமிழக அரசு கோரிக்கை விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த மசோதா குறித்து எந்தவித முடிவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எடுக்காமல் இருந்த நிலையில் இதுகுறித்து பாராளுமன்றத்திலும் தமிழக எம்பிக்கள் காரசாரமாக விவாதம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். சட்டப்பேரவையில் மறுபரிசீலனை செய்ய மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளதாக ஆளுனரின் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1ம் தேதி சட்டம் சபாநாயகருக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதாக ஆளுநர் மாளிகை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version