இந்தியா

இனி நர்சிங், சித்தா படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம்: மாணவர்கள் அதிர்ச்சி

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக எம்பிபிஎஸ் என்ற மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நீட் தேர்வுக்கு தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளுமே நீட்தேர்வுவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எம்பிபிஎஸ் என்ற மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு வைத்ததற்கே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இனிமேல் நர்சிங் மற்றும் சித்தா படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

இந்த ஆண்டுமுதல் நர்சிங், சித்தா, யுனானி ஆகிய படிப்புகளில் சேரவும் நீட் தேர்வு கட்டாயம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிப்பில் இந்த அறிவிப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதனை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version