இந்தியா

நாளை நீட் தேர்வு – தேர்வு அறைக்கு என்னவெல்லாம் கொண்டு செல்லலாம்? புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

Published

on

பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது. எனவே நீட் தேர்வுக்கு வரும் மாணவர்களுக்குத் தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

1) நீட் தேர்வுக்கு அனுமதிச் சீட்டு கொண்டு செல்ல வேண்டும்.
2) விண்ணப்பிக்கும் போது பதிவேற்றப்பட்ட அதே புகைப்படம்.
3) 50 மில்லி சானிடைசர்.
4) உள்பக்கம் தெளிவாகத் தெரியும் வகையில் தண்ணீர் பாட்டில்.
5) முகக் கவசம், கையுறை கட்டாயம். தேர்வு அறைக்குள் நுழையும் முன்பு புதிய மாஸ்க் வழங்கப்படும். அங்கு அளிக்கப்படும் மாஸ்க் மட்டுமே உள்ளே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும்.
6) மாற்றுத்திறனாளிகள் எனில் அதற்கான சான்றிதழ்.
7) குறைவான உயரம் கொண்ட காலணிகள் அணியலாம். ஷூ உள்ளிட்ட கால்களை முழுவதும் மூடும் காலணிகளுக்கு அனுமதி கிடையாது.
8) முழுக்கை ஆடைகளுக்கு அனுமதி கிடையாது.
9) மதம் சார்ந்த அல்லது சமூகப் பழக்கவழக்கம் சார்ந்த குறிப்பிட்ட ஆடைகளை அணிந்து வந்தால் கட்டாயம் சோதனை செய்யப்படுவர். எனவே சீக்கிரமாகவே தேர்வு அறைக்கு வர வேண்டும்.
10) எனவே கம்மல், செயின் போன்ற அணிகலன்கள் அணிவதைத் தவிர்க்கவும்.
11) இன்றே(12/09/2020) தேர்வு நிலையம் சென்று இருக்கை அங்கு தான் உள்ளதா என்று தெரிந்துக்கொண்டு கடைசி நேரக் குழுப்பத்தை தவிர்க்கலாம்.

நாடு முழுவதும் 3,842 தேர்வு மையங்களில் 15,97,433 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் 238 தேர்வு மையங்களில் 1,17,990 மாணவர்கள் தேர்வு எழுத இருக்கின்றனர். சென்ற ஆண்டை விட நடப்பு ஆண்டு தமிழகத்திலிருந்து தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தேசிய அளவிலான பொறியியல் படிப்புகளுக்காக எழுதப்படும் JEE தேர்வு எழுத 2 மாணவர்கள் வராத நிலையில், நீட் தேர்வுக்கு எவ்வளவு நபர்கள் வருவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version