இந்தியா

NEET 2020, JEE தேர்வுகள் தேதி அறிவிப்பு!

Published

on

மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போகஹ்ரியால் நிஷான் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், NEET 2020, JEE தேர்வுகளின் தேதி எப்போது என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி JEE நுழைவு தேர்வு ஜூலை 18 முதல் 23-ம்தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். மருத்துவ படிப்புகளுக்கான NEET 2020 நுழைவு தேர்வு ஜூலை 26-ம் தேதி நடைபெற உள்ளது. JEE அட்வான்ஸ்ட் நுழைவு தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும் அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

JEE Main தேர்வு மற்றும் NEET 2021-ம் ஆண்டுக்கான பாடத்திட்டங்களும் வெளியாகியுள்ளது. மாணவர்கள் சொந்தமாக படிப்பது நல்லது என்றும், முடிந்தால் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளவும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

JEE தேர்வுக்கு 9 லட்சம் நவர்களும், NEET தேர்வுக்கு 15.93 லட்சம் மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் போகஹ்ரியால் நிஷான் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version