பிற விளையாட்டுகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: பெற்று கொடுத்தவர் யார் தெரியுமா?

Published

on

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே இந்தியாவுக்கு 4 வெண்கலம் மற்றும் 2 வெள்ளி கிடைத்துள்ள நிலையில் தங்கப்பதக்கம் கிடைக்காதா என்ற ஏக்கம் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் ஏக்கம் இருந்து வந்தது. இந்த ஏக்கத்தைப் போக்கி உள்ளார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா.

இவர் இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரம் எறிந்ததை அடுத்து அவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. இதனை அடுத்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் வென்ற தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்தியாவுக்கு 7-வது பதக்கம் டோக்கியோ ஒலிம்பிக்கில் கிடைத்துள்ளது.

தங்கம் வென்ற தங்கமகன் மீரா சோப்ரா அவர்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் 24 வயதான இவர் இந்திய ராணுவத்தில் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இந்தியாவின் நம்பர் ஒன் ஈட்டி எறிதல் வீரர் ஆக இருந்த நிலையில் தற்போது ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றதை அடுத்து உலக அளவில் கவனிக்க பட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version