தமிழ்நாடு

சிபிஎஸ்இ தேர்வே ரத்து, நீட் தேர்வு தேவையா? முக ஸ்டாலின்

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வு தேவையா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் .இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் சிபிஎஸ்சி தேர்வு செய்யப்பட்டுள்ளன. மரண பயமும் பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் முதுகலைப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வும், மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு தேவையா என முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பொதுமக்கள் தரப்பில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகள் போராட்டம் செய்து வரும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலும் நீட் உள்பட நுழைவுத்தேர்வுகளை ந்டத்தி ஆக வேண்டுமா என கேள்வி எழுப்பி உள்ளது சரியான ஒரு நடவடிக்கை என அக்கட்சியின் தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு கொரோன வைரஸ் பாதிப்புக்கும் இடையில் நீட் தேர்வு நடத்தப்பட்டது என்பதும் இதற்கு கடுமையான கண்டனங்களை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version