சினிமா செய்திகள்

மிஸ்டர் லோக்கல் படத்தின் ‘நீ நெனச்சா’ பாடல் ரிலீஸ்!

Published

on

ராஜேஷ் எம். இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நீ நெனச்சா.. என் கை புடிச்சா’ என்ற மெலோடி ரொமாண்டிக் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வாரம் மே 17ம் தேதி வெளியாகவுள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். சித் ஸ்ரீராம் குரலில் வெளியாகியுள்ள இந்த பாடல் இளைஞர்களின் மனதை சட்டென்று கவரும் விதத்தில் இருக்கிறது. சித் ஸ்ரீராமின் மேஜிக் வாய்ஸ் என்பதால், பலரது காலர் ட்யூன் உடனடியாக மாறியும் வருகின்றன.

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு பிளாக்பஸ்டர் வெற்றியாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version