இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

Published

on

உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது என்ற அதிர்ச்சி தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் இந்தியாவில் சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்றுமுன் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்த தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 94 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது உலக அளவில் இதுவரை இல்லாத இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இதற்கு முன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி அமெரிக்காவில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 670 பேருக்கு குழந்தை ஏற்பட்டதே உலகில் ஒரே நாளில் அதிகபட்சமாக ஏற்பட்ட அளவாக இருந்தது. இதனை அடுத்து இன்று இந்தியாவில் சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் இரண்டாயிரத்தை கடந்து உள்ளது என்பதும் எந்த நாட்டிலும் இது போல் ஒரே நாளில் 2000 பேர் கொரோனாவால் பலியானது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனா முதல் அலையின்போது 98 ஆயிரத்து 795 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதை விட தற்போது மூன்று மடங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவில் கொரோனாவால் வைரஸ் பாதிப்பு இதே ரீதியில் சென்றால் அமெரிக்காவை முந்தி விட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனையடுத்து உடனடியாக இந்தியாவில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்த வேண்டும் என்றும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version