இந்தியா

3ஆம் அலையில் தினமும் ஒரு லட்சம் கேஸ்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

Published

on

இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்பட்டால் தினமும் ஒரு லட்சம் கொரோனா கேஸ்கள் உருவாகலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உலகின் ஒரு சில நாடுகளில் ஏற்கனவே மூன்றாவது அலை தோன்றியுள்ள நிலையில் இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஐசிசிஎம் ஆராய்ச்சியாளர் மற்றும் மூத்த மருத்துவர் சமீரான் பண்டா அவர்கள் தெரிவித்துள்ளார்

இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் மூன்றாவது அலை ஏற்படும் என்றும் ஆகஸ்ட் இறுதியில் உச்சத்தை தொடும் என்றும் தினசரி ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்

ஆனால் அதே நேரத்தில் இரண்டாவது அலை அளவுக்கு மோசமாக இருக்காது என்றாலும் இந்தியாவில் தடுப்பூசிகள் குறைவாக போடப்பட்டுள்ளது மற்றும் ஊரடங்கில் தளர்வுகள் காரணமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். இதனை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று முடிந்த அளவு வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என்றும் பயணத்தை முடிந்த அளவு குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 100 முதல் 125 நாட்கள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version