இந்தியா

50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் காலாவதி? திரும்ப எடுக்க சீரம் மறுப்பு!

Published

on

நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் 50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடுத்த மாதம் காலாவதியாக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் மத்திய அரசு இந்த தடுப்பூசிகளை ஒதுக்கிய நிலையில் தற்போது நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் 50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் காலாவதியாகும் என்று கூறப்பட்ட நிலையில் இந்திய மருத்துவ கழகம் இந்த தடுப்பூசிகளை திரும்ப எடுத்துக்கொள்ள வேண்டும் என சீரம் நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டது.

ஆனால் சீரம் நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. தடுப்பூசிகளை திரும்ப எடுத்துக் கொள்வதோ அல்லது மாற்றி தருவது குறித்து எந்தவிதமான ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றும் அதுமட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் எந்த வெப்பநிலையில் இருந்தது என்பது குறித்து ஆதாரம் இல்லை என்றும் எனவே தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறியிருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள 50 லட்சம் கோவில் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version