தமிழ்நாடு

சனி, ஞாயிறு 2 நாட்களில் சென்னையில் இருந்து இத்தனை லட்சம் பேர் பயணமா?

Published

on

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து நேற்றும் நேற்று முன்தினமும் தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் திறந்திருந்தன என்பதும் தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் பேருந்து சேவைகள் இயக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே.

குறிப்பாக சென்னையில் இருந்து தங்களுடைய சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன என்பதும் அந்த பேருந்துகளில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள தகவலின்படி சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 450 பேர் பயணம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக ரயில்களிலும் விமானங்களிலும் சொந்த வாகனங்களிலும் ஆயிரக்கணக்கானோர் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்று உள்ளதால், சென்னையில் இருந்து சென்றவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது.

சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு பொது மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 619 பேருந்துகள் இயக்கப்பட்டன என்பதும், இதில் சென்னையிலிருந்து மற்றும் 9626 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சாலைகள் ஆகியவை வெறிச்சோடி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version