உலகம்

சீனாவுக்கு ஆதரவளிக்கும் கே.பி. சர்மா ஓலி.. இந்தியாவிடம் உதவி கேட்ட பிரசாண்டா.. நேபாளத்தில் நடக்கும் திருப்பங்கள்!

Published

on

காத்மாண்டு: நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலியின் அரசியலமைப்பற்ற மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிரான தனது தற்போதைய போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு இந்தியா, சீனா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் தனது கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளதாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் புஷ்பா கமல் தஹால் பிரசாண்டா தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் கடந்த சில மாதங்களாகவே மிகப்பெரிய அரசியல் குழப்பம் நடைபெற்று வருகிறது. நேபாளத்தை ஆளும் கமியூனிஸ்ட் கட்சி தற்போது இரண்டு பிரிவாக பிளவுபட்டு இருக்கிறது. சீன ஆதரவு கொண்ட பிரதமர் கே.பி. சர்மா ஓலி தலைமையில் ஒரு அணியும், இந்திய ஆதரவு கொண்ட கட்சியின் தலைவர் பிரசாண்டா தலைமையில் மற்றொரு அணியும் உருவாகியுள்ளது. கடந்தாண்டு இறுதியில் இந்திய பகுதிகளை உள்ளடக்கி புதிய நேபாள வரைபடத்தை வெளியிட்டார் பிரதமர் கே.பி. சர்மா ஓலி. அப்போது தொடங்கியது இவர்களுக்கு இடையிலான அதிகார மோதல். இப்போது வரை நீடித்துக்கொண்டே இருக்கிறது. இந்த மோதலுக்கிடையில் டிசம்பர் 20ம் தேதி நாடாளுமன்றத்தை கலைத்தார் பிரதமர் கே.பி. சர்மா ஓலி.

அவருடைய இந்த நடவடிக்கை, பிரசண்டா தலைமையிலான பிரிவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் கே.பி. சர்மா ஓலியின் அரசியலமைப்பற்ற மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிரான தனது தற்போதைய போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு இந்தியா, சீனா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் தனது கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளதாக புஷ்பா கமல் தஹால் பிரசாண்டா தெரிவித்துள்ளார். நாங்கள் கூட்டாட்சி மற்றும் ஜனநாயகத்தை ஒருங்கிணைத்து, சமாதான முன்னெடுப்புகளை தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் பிரதிநிதிகள் சபை மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச ஊடக பிரதிநிதிகள் குழுவுடன் உரையாடியபோது பிரசாண்டா கூறினார்.

பிரதிநிதிகள் சபையை கலைக்கும் பிரதமர் ஓலியின் அரசியலமைப்பற்ற மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்காது என்று நான் நம்புகிறேன். சபை மீண்டும் நிலைநிறுத்தப்படாவிட்டால், நாடு கடுமையான அரசியல் நெருக்கடியில் மூழ்கும். ஓலியின் அரசியலமைப்பற்ற மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அண்டை நாடான இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் தனது கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளதாக பிரசாண்டா கூறினார்.

இருப்பினும், ஆளும் கட்சிக்குள் பிளவு ஏற்படுவதைத் தடுக்க சீனா நான்கு உறுப்பினர்களைக் கொண்ட உயர் மட்டக் குழுவை கடந்த டிசம்பர் மாதம் நேபாளத்திற்கு அனுப்பியது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் துணை மந்திரி குவோ யெஜோ தலைமையிலான குழு, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் பல உயர்மட்ட தலைவர்களுடன் தனித்தனியான சந்திப்புகளை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது

author avatar
seithichurul

Trending

Exit mobile version