வேலைவாய்ப்பு

இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் என்.சி.சி வீரர்களுக்கு வேலை!

Published

on

இந்திய ராணுவத்தில் என்.சி.சி. 47-வது சிறப்பு நுழைவின் அடிப்படையில் இளங்கலை பட்டம் பெற்ற 55 காலியிடங்கள் உள்ளது. இதில் என்.சி.சி. வீரர்களை ராணுவத்தில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்தியக் குடியுரிமை பெற்ற, திருமணமான மற்றும் திருமணமாகாத ஆண்கள், பெண்களிடம் இருந்தால் விண்ணப்பியுங்கள்.

வேலை செய்யும் இடம்: சென்னை

மொத்த காலியிடங்கள்: 55. இதில் 5 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது: 19 – 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 02.06.1995 மற்றும் 01.06.2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் என்.சி.சி. பயிற்சியில் ‘சி’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். முதல் 2 ஆண்டுப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: என்.சி.சி. பயிற்சியில் பெற்றிருக்கும் தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அவர்களுக்குக் குழு தேர்வு, உளவியல் தேர்வு என நிலை-1, நிலை-2 என இரு நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு அதில் தேர்ச்சி பெருவர்களுக்கு இறுதியாக மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். 49 வாரக் காலப் பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரி வேலையில் நியமனம் செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/NCC_47.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.08.2019

author avatar
seithichurul

Trending

Exit mobile version