விமர்சனம்

நயன்தாரவின் ‘கோலமாவு கோகிலா” திரைப்பட விமர்சனம்!

Published

on

தமிழ் திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வளர்ந்துள்ள நயன்தாரா நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியான கோலமாவு கோகிலா திரைப்படம் ரசிகர்கள் மனத்தில் கோலம் போட்டுள்ளதா? இல்லையா என இங்குப் பார்ப்போம்.

கோலமாவு கோகிலா திரைப்படம் வெளியாகும் முன்பு வந்த டீசர், டிரைலர், பாடல்கள் மூலம் படத்தின் எதிர்பார்ப்பு முன்னணி நாயகர்களுக்கு இணையாக உருவாகி இருந்தது.

சிம்பு நடிப்பில் வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தினை இயக்கி பாதியில் பரிதவித்து இருந்த நெல்சன் தான் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இயக்குனர். நயன்தாராவுடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின், நவீன் குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சரி விமர்சனத்திற்கு வருவோம். மிடில் கிளாஸ் குடும்பத்தினைச் சேர்ந்தவர் நயன்தாரா. கோலம் வரைவதில் ஆர்வம் உள்ளவர். அன்றாட வாழ்க்கையை நடத்தவே சிறமப்படும் குடும்பத்தில் அவரது தாயான சரன்யாவிற்குப் புற்று நோய் என்ற செய்தி இடியாக விழுகிறது.

சிகிச்சைக்குப் பணம் தேவைப்படப் போதை மருந்து கும்பலிடம் சிக்குகிறார். அவர்கள் மூலம் தன் அம்மாவின் சிகிச்சைக்குப் பணம் நயன்தாரவுக்குக் கிடைத்ததா? அந்தப் போதை மருந்து கடத்தல் கும்பலிடம் இருந்து நயன்தாரா எப்படித் தன்னையும் தனது குடுப்பத்தினையும் காப்பாற்றிக்கொள்கிறார் என்பது மீத கதை.

படம் முழுக்கவே நயன்தாரா அப்பாவியாகவும், பதட்டத்துடனும் இருப்பது போன்ற கட்சிகள் ரசிகர்களைக் கண்டிப்பாகக் கவரும். யோகி பாபு தனக்குக் கிடைத்த கதா பாத்திரத்தினைத் திறம் படச் செய்து கைத்தட்டளகை அள்ளுகிறார். படத்தின் காமெடி காட்சிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார். காமெடியினை நெல்சம் திறம்படக் கையாண்டுள்ளார்.

சரன்யா பொண்வன்னன் பற்றிக் கூற வேண்டியதில்லை. அவரது பாத்திரத்தினைச் சிறப்பாக நடித்துக்கொடுத்துள்ளார். முதல் பாதி விரு விருப்பாகவும், இரண்டாம் பாதி நிதானமாகவும் செல்கிறது. ஆனால் யோகி பாபுபின் நகைச்சுவை அதனைச் சரி செய்துவிடுகிறது.

அனிருத் இசையில் பாடல்கள் வரவேற்பு பெற்று இருந்த நிலையில் பின்னணி இசையில் தன் பங்கை சரியாகச் செய்து இருந்தாலும் ஆங்காங்கே வசனத்தினை விடத் தனது இசையினைக் கூடுதலாகப் போட்டுள்ளது மைனஸ் என்று கூறலாம்.

நெல்சன் தனக்குக் கிடைத்த வாய்ப்பினை திறமையாகக் கையாண்டு ரசிகர்களின் மனதில் கோலம் போட்டுள்ளார் என்று செய்தி சுருள் தளம் இங்கு உறக்க செல்கிறது.

seithichurul

Trending

Exit mobile version