சினிமா

திருப்பதியில் காதலனுடன் நயன்தாரா.. செமயா வைரலாகும் வீடியோ

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் முதன்மையாக இருப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவில் இவருக்குதான் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. ரூ.5 கோடி முதல் 6 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது.

ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார். இவர் நடித்தாலே படம் ஹிட்தான் என்கிற நிலையை அவர் உருவாக்கியுள்ளார். கண் தெரியாத பெண்ணாக அவர் நடித்து வெளியான ‘நெற்றிக்கண்’ திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

அடுத்ததாக அவரின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் காதலன் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி சென்ற நயன்தாரா ஏழுமலையானை தரிசனம் செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நயன்தாரா கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்றாலும் இந்து கடவுள்களையும் வழிபடும் பழக்கமுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version