சினிமா செய்திகள்

“கொள்ளை அழகு”- லைக்ஸ்களை அள்ளும் நயன்தாரா – விக்னேஷ் புதிய புகைப்படம்!!

Published

on

கோலிவுட்டின் ‘க்யூட்-கப்புல்’ ஆக வலம் வந்து கொண்டிருப்பது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் இளம் இயக்குநர் விக்னேஷ் சிவனும்தான். ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஆரம்பித்த அவர்களின் காதல், நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டே போகிறது. இருவரும் இணைந்து திரைப்படங்களில் பணியாற்றுவது மட்டுமல்ல, சேர்ந்து படம் தயாரிப்பதையும் ஆரம்பித்து உள்ளார்கள்.

அடுத்ததாக இந்த இளம் ஜோடி இணைந்து பணியாற்றும் திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த ஆண்டு நடுவாக்கில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தையும் நயன்- விக்னேஷின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ தான் தயாரிக்கிறது.

அதே நேரத்தில் தங்களுக்கான நேரத்தையும் நயனும் விக்னேஷும் சரியாக ஒதுக்கி ரொமான்ஸ் செய்து வருகிறார்கள். குறிப்பாக, வெளிநாட்டு ட்ரிப், ரொமான்டிக் அவுட்டிங் என வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள். நயன்தாராவுக்கு சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ கணக்கு இல்லை. அதே நேரத்தில் விக்னேஷ் சிவன், இன்ஸ்டா முதல் ட்விட்டர் வரை அனைத்திலும் பிஸியாக இருப்பவர்.

அந்த வகையில் தனது இன்ஸ்டாவில் நயனுடன் நெருக்கமாக இருக்கும் புதிய போட்டோவைப் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். அதற்கு லைக்ஸ்கள் அள்ளி வருகின்றன.

வைரல் போட்டோ இதோ:

seithichurul

Trending

Exit mobile version