சினிமா செய்திகள்

நடிகை, தயாரிப்பாளரை அடுத்து அடுத்த அவதாரம் எடுத்த நயன்தாரா

Published

on

பிரபல நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளர் ஆனார் என்பது ஏற்கனவே தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அவர் தொழிலதிபராகவும் ஆகியுள்ளார். பிரபல மருத்துவர் ரெனிடா ராஜன் என்பவருடன் இணைந்து லிப் பாம் என்ற அழகு நிலையத்தை நயன்தாரா தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான லிப் பாம் வகைகள் அதாவது லிப்ஸ்டிக் வகைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் உலகிலேயே மிகப்பெரிய தொழில்நுட்பம் மூலம் புதிய வகைக லிப்ஸ்டிக்ஸ்களை தரும் நிறுவனங்களில் ஒன்றாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

நடிகை, தயாரிப்பாளரை அடுத்து தொழிலதிபராக மாறியுள்ள நயன்தாராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version