சினிமா செய்திகள்

மலையாளத்தில் அடுத்தடுத்து கமிட் ஆகும் நயன்தாரா..!- ஃபகத் உடன் புது கூட்டணி

Published

on

நடிகை நயன்தாரா அடுத்தடுத்து தொடர்ச்சியாக மலையாளப் படங்களின் மீதும் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளார்.

நடிகை நயன்தாரா தற்போது மலையாளத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் உடன் ‘பாட்டு’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப் படத்தை ‘நேரம்’, ‘ப்ரேமம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்குகிறார். சமீபத்தில்தான் மலையாளத்தில் ‘நிழல்’ என்ற த்ரில்லர் படத்தில் நாயகியாக தனது படப்பிடிப்பை நயன்தாரா தொடங்கினார்.

தமிழில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் உடனான அண்ணாத்த, இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார் நயன்தாரா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் மிகவும் பிஸியான நடிகையாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உலா வருகிறார்.

seithichurul

Trending

Exit mobile version