சினிமா செய்திகள்

16 படங்களில் ஒன்று மட்டுமே வெற்றி: லேடி சூப்பர் ஸ்டாருக்கு இறங்குமுகம்?

Published

on

தமிழ் திரை உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில ஆண்டுகளில் நடித்த 16 படங்களில் ஒரே ஒரு படம் மட்டுமே வெற்றி பெற்று உள்ளதாக கூறப்படுவதால் லேடி சூப்பர் ஸ்டாரின் வெற்றி இறங்குமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

நயன்தாரா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதன்பின்னர் விஸ்வாசம் மற்றும் பிகில் ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது என்பதும் இந்த இரண்டு படங்களும் அஜித் விஜய்க்காக தான் ஓடியது என்பதும் தெரிந்ததே

இதனை அடுத்து நயன்தாராவுக்காக ஓடிய படம் என்றால் அது மூக்குத்தி அம்மன் ஒன்று மட்டுமே. அதனை அடுத்து வந்த அனைத்து படங்களும் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனால் லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நயன்தாரா இழந்து விட்டதாகவும் விரைவில் அவர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படமும் பெரிய வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

 

seithichurul

Trending

Exit mobile version