சினிமா செய்திகள்

பிறந்த நாள் கொண்டாடும் நயன்தாராவின் புதிய பட டைடில் அறிவிப்பு!

Published

on

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அவரது காதலர் விக்னேஷ் சிவன் உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நயன்தாரா நடிக்க உள்ள புதிய படத்தின் டைட்டில் சற்றுமுன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ‘கனெக்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்க உள்ளார் என்பதும், இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த ’மாயா’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் அனுபம்கெர் ஆகியோரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது.

நயன்தாரா ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’, அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ’லயன்’ உள்பட 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் அந்த படங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version