சினிமா செய்திகள்

கமல் படத்தில் முதல்முறையாக நயன்தாரா? எந்த படத்தில் தெரியுமா?

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், உள்பட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து விட்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, முதல் முறையாக உலக நாயகன் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தேர்தலுக்குப்பின் தொடங்க உள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் கமல் ஜோடியாக நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதற்கு கமல்ஹாசன் ஒப்புதல் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால் முதல்முறையாக கமல்ஹாசனுடன் நயன்தாரா நடிப்பது உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நயன்தாரா தவிர இன்னொரு பிரபல நடிகையும் நடிக்கவுள்ளாராம்.

நயன்தாரா ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ’நெற்றிக்கண்’, ‘அண்ணாத்த’, ‘நிழல்’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே.

Trending

Exit mobile version