சினிமா

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படம் எப்படி? திரைவிமர்சனம்

Published

on

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படமான ‘நெற்றிக்கண்’ படத்தின் விமர்சனம் இதோ:

சகோதரருடன் காரில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்தில் பார்வை இழந்த சிபிஐ அதிகாரி நயன்தாரா, பார்வை இழப்பு காரணமாக வேலையையும் இழக்கின்றார். இந்த நிலையில் நயன்தாரா, ஒருமுறை பேருந்து நிலையத்தில் இருக்கும் போது அவரை அஜ்மல் கடத்த முயற்சி செய்கிறார். அவரிடம் இருந்து தப்பிக்கும் நயன்தாரா அவரைப் பற்றிய தகவல்களை காவல்நிலையத்தில் கொடுக்கிறார். அதன்பிறகுதான் தன்னைக் கடத்த முயன்றவன் ஏற்கனவே பல பெண்களை கடத்தி இருக்கிறார் என்பது நயன்தாராவுக்கும் போலீசுக்கும் தெரிய வருகிறது. இதனை அடுத்து நயன்தாராவின் உதவியுடன் வில்லனை பிடிக்க போலீஸ் எடுத்த முயற்சிதான் இந்த படத்தின் மீதிக்கதை.

பார்வையற்ற வேடத்தில் நயன்தாரா சூப்பராக நடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பார்வை இல்லாமல் இருந்தாலும் மூன்றாவது கண்ணான நெற்றிகண் மூலம் மிகச் சிறப்பாக அவர் செயல்படுவது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. குறிப்பாக மெட்ரோ டிரெயினில் செல்லும்போது சரனண் சக்தி கூறும் தகவல்களிலிருந்து வில்லனிடம் இருந்து தப்பிப்பது, வில்லனிடம் நேருக்கு நேர் சவால் விடுவது, வில்லனிடம் மாட்டிக் கொண்ட போதும் ஒவ்வொரு முறையும் புத்திசாலித்தனமாக தப்பிப்பது ஆகிய காட்சிகள் நயன்தாராவின் நடிப்புக்கு தீனி போடும் காட்சிகளாக அமைந்துள்ளன.

நயன்தாராவை அடுத்து இந்த படத்தில் பட்டையை கிளப்பி இருப்பது சரண் சக்தி தான். ஏற்கனவே ’கோலமாவு கோகிலா’ படத்தில் தனது நடிப்பு முத்திரையை பதித்த சரண் சக்தி இந்த படத்தில் சூப்பராக நடித்துள்ளார்.

அஜ்மல் கேரக்டர் கொஞ்சம் முரணானது என்றாலும் அவரது நடிப்பில் எந்தவித குறையும் இல்லை. படத்தின் திரைக்கதையில் மிகப்பெரிய ஓட்டைகள் உள்ளன. குறிப்பாக மேல் அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆளாகும் அஜ்மல் மேலதிகாரிகள் முன் திமிறாக பேசுவது நம்பும்படியாக இல்லை. அதே போல் அஜ்மல் மிக சாதாரணமாக ஜெயிலில் இருந்து தப்பிப்பது நயன்தாரா அடிக்கடி கையில் கிடைத்தும் வழக்கமான தமிழ் சினிமா வில்லன்கள் போல் கோட்டை விடுவது போன்ற அபத்தமான காட்சிகளும் உண்டு.

மொத்தத்தில் நயன்தாரா ஒரே ஒருவருக்காகவும் முன்பாதி திரைக்கதைக்காகவும் இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version