சினிமா செய்திகள்

மணமகள் பெற்றோர் சம்மதமில்லாமல் நயன்தாரா பட இயக்குனரின் திருமணத்தை நடத்தி வைத்த ராம்!

Published

on

மணமகளின் பெற்றோர் சம்மதம் இல்லாமல் நயன்தாரா பட இயக்குனர் ஒருவரின் திருமணத்தை பிரபல இயக்குனர் ராம் நடத்தி வைத்துள்ளார்.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தயாரித்த ’கூழாங்கல்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் பி.எஸ்.வினோத்ராஜ். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் சர்வதேச விருதுகளை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ். மற்றும் அறிவு நிலா திருமணத்தை இயக்குனர் ராம் நடத்தி வைத்துள்ளார். இது ஒரு காதல் திருமணம் என்பதும் சாதி மறுப்பு திருமணம் என்றும் கூறப்படுகிறது. இந்த திருமணத்திற்கு மணமகளின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதால் இயக்குனர் ராம் மற்றும் அவருடைய நண்பர்கள் நடத்தி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது காதல் குறித்து இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் கூறும்போது ’நானும் அறிவு நிலாவும் தனுஷ்கோடியில் இருந்து ரயிலில் வந்து கொண்டிருக்கும்போது தற்செயலாக சந்தித்து ஒருவரையொருவர் பேசி நண்பர்களானோம் என்றும் அதன்பிறகு எங்கள் நட்பு காதலாக மாறியது என்றும் கூறினார்.

தன்னுடைய சினிமா தொழிலுக்கு காதல் சரியாக வராது என எனது நண்பர்கள் கூறினாலும் என் மீது காதலில் அறிவு நிலா உறுதியாக இருந்ததால் அறிவு நிலாவை திருமணம் செய்து கொண்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்போதைக்கு அறிவு நிலாவின் பெற்றோர்கள் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் விரைவில் எங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இயக்குநர் ராம் நடத்தி வைத்த இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version