சினிமா செய்திகள்

அஜித் பட வாய்ப்பை விக்னேஷ் சிவன் வாங்கி கொடுத்தது நயன்தாராவா? ஆச்சரிய தகவல்

Published

on

அஜித் நடிக்க இருக்கும் 61வது திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க இருக்கிறார் என்பதும் ஜிப்ரான் இசையமைக்க இருக்கிறார் என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும், அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித்தின் 62வது படம் குறித்த தகவல் நேற்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. அஜித்தின் 62வது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நயன்தாராதான் நாயகி என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்தபடத்திற்கு விக்னேஷ் சிவனுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது கசிந்துள்ளது. அஜித் நடித்த ’விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பின்போது நயன்தாரா, விக்னேஷ் சிவனை அறிமுகப்படுத்தி கதை சொல்ல வைத்த்தாகவும், அந்த கதை அஜித்துக்கு பிடித்ததை அடுத்து கண்டிப்பாக இந்த படத்தை செய்வோம், கொஞ்சம் காத்திருங்கள் என்று அஜித் கூறியதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து தற்போது விக்னேஷ் சிவனை ஞாபகம் வைத்து அஜித் வாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் இந்த வாய்ப்பு கிடைக்க நயன்தாராதான் காரணம் என்றும் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

seithichurul

Trending

Exit mobile version