சினிமா செய்திகள்

வேலுநாச்சியார் படத்தில் நான் நடிக்கிறேனா?- நயன்தாரா தரப்பு விளக்கம்

Published

on

நடிகை நயன்தாரா அடுத்ததாக வேலுநாச்சியார் பயோபிக் படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகின.

பல செய்தித் தளங்களிலும் வேலுநாச்சியார் ஆக நயன்தாரா நடிக்க உள்ளார் என செய்திகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து நடிகை நயன்தாராவின் தரப்பிலிருந்து இதற்கான விளக்கம் அறிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.

விளக்க அறிக்கையின் அடிப்படையில், “ஊடகங்களில் வரலாற்றுத் திரைப்படமாக ராணி வேலுநாச்சியாரின் வாழ்க்கைப் படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளன. இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவில்லை. அவரது குரலை இந்த அறிக்கையின் மூலம் பதிவு செய்கிறோம். இது முற்றிலும் அடிப்படை அற்ற வதந்தி. செய்தி ஊடகங்கள் தகவல்களை சரிபார்த்த பின்னர் செய்தி வெளியிட வேண்டும். குறுந்தகவல், போன் கால், அல்லது ஈமெயில் மூலமாக நீங்கள் தகவல்களை சரிபார்க்கலாமே” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல், நடிகர் ரஜினி உடன் அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

seithichurul

Trending

Exit mobile version