சினிமா

துபாயில் புத்தாண்டு கொண்டாடிய விக்னேஷ் – நயன் ஜோடி… வைரல் வீடியோ…..

Published

on

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். மேலும், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஜாலியாக ஊரை சுற்றுவது என பொழுது போக்கி வருகின்றனர். இது தொடர்பான பல புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிறது.

இந்நிலையில், இந்த வருடம் புத்தாண்டை கொண்டாடை இருவரும் சமீபத்தில் துபாய் கிளம்பி சென்றனர். அங்கு மகிழ்ச்சியாக அவர்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். நயன் துபாய் செல்வதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. அங்கு அவரின் சகோதரரின் குடும்பம் வசித்து வருகிறது. சகோதரனின் மகளுடன் நேரம் செலவழிப்பதை நயன்தாரா மிகவும் விரும்புவார்.

இந்நிலையில், நேற்று 12 மணியளவில் துபாயில் அவர்கள் இருவரும் புத்தாண்டு கொண்டாடிய வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒருபக்கம், விஜய்சேதுபதி, நயன்தாரா,சமந்தா நடிப்பில் உருவாகிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version