சினிமா

ஜாதகப்படி நயன்தாரா முதலமைச்சராக வாய்ப்பு!

Published

on

தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார் நடிகை நயன்தாரா. தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வரும் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்படுகிறார். நயன்தாராவை பிரதான கதாப்பாத்திரமாக வைத்து ஹீரோ இல்லாமல் படம் எடுக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நயன்தாராவின் ஜாதகப்படி அவர் முதல்வராக வாய்ப்புள்ளதாக இயக்குநர் ஜி.டி.நந்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகை நயன்தாராவும், சிம்புவும் காதலித்து பிரிந்துவிட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அவர்கள் எதற்காக பிரிந்தார்கள் என்பதை இயக்குநர் ஜி.டி.நந்து அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில், நயன்தாராவும், சிம்புவும் பிரிந்ததற்குப் பல காரணங்கள் சொல்கிறார்கள். ஆனால், எனக்குத் தெரிந்து ஒரு விஷயம் முக்கியமான காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த ஜோசியர் ஒருவரை நானும் சிம்பு தரப்பில் ஒருவரும் சென்று சந்தித்தோம்.

சிம்பு, நயன்தாரா இருவரின் ஜாதகங்களைப் பார்த்த அந்த ஜோசியர், நயன்தாராவுக்குத் திருமணம் நடைபெற்றால் அவர் தெருவுக்குத்தான் வர வேண்டிய நிலை இருக்கிறது. அவருக்கு திருமணம் நடைபெறாமல் இருந்தால் முதலமைச்சர் ஆகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றார். எனவே இந்த காரணத்துக்காகத்தான் அவர்கள் பிரிந்திருக்கலாம் என ஜி.டி.நந்து தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version