சினிமா
ஆகஸ்டில் வருகிறார் கோகிலா
கதாநாயகி கதாபாத்திரத்தையே இதுவரை ஏற்று நடித்து வந்த நயன்தாரா தற்பொழுது வித்தியாசமான கதாபாத்திரங்களை முன்னெடுத்து அவரை மையமாக வைத்து அமையும் கதைகளிலேயே நடித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘டோரா’, அதற்கு முன் வெளிவந்த ‘மாயா’ படங்களிலெல்லாம் நயன்தாராவையே மையமாக வைத்து கதைகள் பின்னப்பட்டிருக்கும். நடிப்பிலும் அவர் அசத்தியிருப்பார்.
அதைத் தொடர்ந்து தற்பொழுது வெளிவர இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்திலேயும் நயன்தாராவிற்கு இதே போன்று முக்கிய கதாபாத்திரம் எனக் கூறப்படுகிறது. நகைச்சுவை நடிகர் யோகி பாபு, நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜாக்குலின் முதலான நட்சத்திரங்கள் நடிக்க ஆகஸ்ட் 17ஆம் தேதி இப்படம் வெளிவருகிறது.
இப்படத்தை இயக்கியிருப்பவர் நெல்சன்.ரசிகர்களும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்றே நயன்தாராவைக் கொண்டாடுவதால் அவரின் இந்தப் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.