சினிமா செய்திகள்

நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு?

Published

on

நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதலித்து வருகின்றனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிந்த நிலையில் 2022ஆம் ஆண்டு நிச்சயம் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டது

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ’காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றதை அடுத்து தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கொண்டிருப்பதாகவும், நேற்று திருப்பதி சென்ற நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்கு திருமணம் நடைபெற இருக்கும் பணிகளை மேற்பார்வை செய்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே திருப்பதியில் ஜூன் 9ஆம் தேதி நயன்தாராவுக்கும் திருமணம் நடப்பது கிட்டத்தட்ட உறுதி என்றே கூறப்படுகிறது. இதனை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

 

seithichurul

Trending

Exit mobile version