சினிமா செய்திகள்

ரொமான்டிக் ஆன புத்தாண்டு வாழ்த்துகளுடன் நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி..!

Published

on

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இணைந்து ரொமான்டிக் ஆக ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் புத்தாண்டை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொண்டாடி வருவதாகத் தெரிகிறது. இருவரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிட்ட புகைப்படமும் வைரலானது. தற்போது புத்தாண்டுக்கு விக்னேஷ் சிவன் வெளியிட்ட காதல் புகைப்படமும் வைரலாகி உள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியும் நெற்றிக்கண் படத்தை தயாரித்தும் வருகிறார். இரண்டு படங்களிலும் நடிகை நயன்தாரா கதாநாயகி ஆக நடித்து வருகிறார். கூடுதலாக நயன்தாரா ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் கூடுதலாக இரண்டு படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.

Trending

Exit mobile version