சினிமா செய்திகள்

‘நயன் நீ சூப்பரா செலெக்ட் பண்ற’- புது பட அறிவிப்புடன் விக்னேஷ் சிவன்..!

Published

on

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்து வழங்கும் ‘கூழாங்கல்’ படத்துக்கான அறிவிப்பு மற்றும் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தின் சார்பில் நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. அடுத்ததாக ராக்கி திரைப்பட உரிமையைக் கைப்பற்றி வழங்க உள்ளனர்.

இந்த சூழலில் தற்போது ‘கூழாங்கல்’ திரைப்படத்தை தயாரித்து வழங்குவதாக ரவுடி பிக்சர்ஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன், “நயன்தாரா நாம் தயாரித்து வழங்குவதற்காக நீ தேர்ந்தெடுக்கும் தனித்துவமான கதைகளால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version