சினிமா செய்திகள்

சல்மான்கானுடன் நயன்தாரா நடிப்பது உண்மையா? பரபரப்பு தகவல்

Published

on

அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஷாருக்கானின் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வரும் நிலையில் சல்மான்கானின் அடுத்த படத்தில் நாயகி நயன்தாரா தான் என்று கூறப்படுவது குறித்த தகவல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

சல்மான்கான் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தங்களைத் தாங்களே பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்ளும் ஒரு சிலர் யூடியூப் சேனலில் வதந்தியை கிளப்பி வருகின்றனர்.

ஆனால் சல்மான்கான் தரப்பிலிருந்து இதுகுறித்து விசாரித்தபோது நயன்தாராவிடம் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் அடுத்த திரைப்படத்தின் நாயகி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதாகவும், அதனால் நயன்தாரா நடிக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறியுள்ளனர் .

மேலும் நயன்தாரா திருமணத்துக்குப்பின் நடிப்பதை குறைத்துக் கொள்வது அல்லது நிறுத்திக் கொள்வது என்ற முடிவில் இருக்கும் நிலையில் அவர் பாலிவுட்டில் சென்று நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று பொருள்படுகிறது.

அஜித் 62 படத்தில் நயன்தாரா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த படத்துடன் அனேகமாக நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுவார் என்றும் கூறப்படுகிறது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version