சினிமா

விஜய் நடிக்கும் பிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா!

Published

on

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்தின் நாயகியாக நடிக்கும் நயன்தாராவின் கதாப்பாத்திரம் என்ன என்ற கேள்வி நிலவி வந்தது. இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாரா மருத்துவ மாணவியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா நடிப்பில் உருவாகிவரும் படம் பிகில். தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் உரிமையை ஏஜிஎஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ள லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கதாப்பாத்திரம் என்ன என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் நயன்தாரா கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்க, ரெபா மோனிகா ஜான், இந்துஜா ஆகியோர் கால்பந்து வீராங்கனைகளாக நடித்துள்ளனர். நாயகி நயன்தாரா மருத்துவ மாணவியாக நடிப்பது தற்போது தெரியவந்துள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version