சினிமா

விக்னேஷுடன் பிறந்த நாளை கொண்டாடிய நயன்!

Published

on

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 34வது பிறந்த நாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஹேப்பி பெர்த் டே நயன்தாரா என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது.

இந்நிலையில், இயக்குநரும் நயன்தாராவின் தற்போதைய காதலருமான விக்னேஷ் சிவன், ஹேப்பி பெர்த்டே லேடி சூப்பர்ஸ்டார் என்ற கேக்கை வெட்டி நயன்தாராவுடன் செலிபிரேட் செய்துள்ளார்.

அந்த கேக்கில், கேமரா, கிளாப் போர்ட், நயன்தாராவின் புகைப்படம் என பல விசயங்கள் நிறைந்து காணப்பட்டன. மேலும், இருவரும் கட்டிப்பிடித்து போஸ் கொடுத்துள்ள படமும் வெளியாகியுள்ளது.

நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படம் விரைவில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version