சினிமா செய்திகள்

மீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேர்கிறாரா நயன்தாரா?

Published

on

கஜினி, ஆதவன், மாசு என்கிற மாசிலமணி படங்களைத் தொடர்ந்து மீண்டும் சூர்யாவுடன் நடிகை நயன்தாரா ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராஜா ராணி படத்தில் கம்பேக் ஆன நயன்தாரா முன்னணி நடிகர்களை சட்டைப் பண்ணாமல் இளம் நடிகர்களுடன் நடித்து லேடி சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்த்தை பெற்றார்.

ஆனால், விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்த நயன்தாரா, தற்போது விஜய்யின் தளபதி 63 மற்றும் ரஜினியுடன் தர்பார் படத்திலும் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகை நயன்தாராவை நாயகியாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சூர்யாவுடன் 3 படங்களில் நடித்துள்ள நடிகை நயன்தாரா 4வது முறையாக சூர்யாவுடன் ஜோடி சேர்வாரா? என்பது விரைவில் தெரியவரும்.

Trending

Exit mobile version