சினிமா செய்திகள்

தர்பார் படத்தின் நயன்தாரா லுக்கும் லீக் ஆகி விட்டது!

Published

on

லைகா தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்து வரும் தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.

அண்மையில் தர்பார் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி கெத்தா நடந்து வரும் புகைப்படம் ரிலீசானது. மேலும், நிவேதா தாமஸ், யோகிபாபு, ரஜினியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகின.

இந்நிலையில், நேற்று முன் தினம் தர்பார் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் லுக்கும் லீக் ஆகி உள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த படக்குழுவினர், படப்பிடிப்பு தளத்தில் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவை போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனிருத் இசையில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய உருவாகி வரும் ரஜினியின் தர்பார் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version