சினிமா செய்திகள்

சின்னத்திரை நயன்தாரா சினிமாவுக்கு வருகிறார்!

Published

on

தெய்வமகள் சீரியலில் நடித்து தமிழக ரசிகர்களை கவர்ந்த சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் வாணி போஜன் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

மேயாத மான் படத்தில், சின்னத்திரை நடிகையான ப்ரியா பவானி ஷங்கர் வைபவுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

தற்போது, வைபவ் நடிக்கும் சிக்ஸர் படத்தில் முக்கிய வேடத்தில் வாணி போஜன் அறிமுகமாகிறார்.

நிதின் சத்யா தயாரிக்கும் த்ரில்லர் கலந்த திகில் படமான சிக்ஸர் படத்தில் வைபவுக்கு ஜோடியாக பலாக் லால்வாணி நடிக்கிறார். மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் வாணி அறிமுகமாகிறார்.

சின்னத்திரையில் சக்சஸ் நாயகியாக வலம் வந்த வாணி, சினிமாவிலும் சக்சஸ் படைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version