சினிமா செய்திகள்

‘கர்ணன்’ படத்தில் நடித்த நடிகரை சரமாரியாக திட்டிய தனுஷ் ரசிகர்கள்: டுவிட்டரில் ஆதங்கம்!

Published

on

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய ‘கர்ணன்’ படத்தில் நடித்த முக்கிய நடிகர் ஒருவரை தனுஷ் ரசிகர்கள் இணையதளங்களில் சரமாரியாக திட்டி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் நட்டி நட்ராஜ். இந்த படத்தில் இவரது நடிப்புக்கு பெரும்பாலான ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்தது என்பதும் பல ரசிகர்களால் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இருப்பினும் ‘கர்ணன்’ படத்தில் தனுஷையும் அவரது குடும்பத்தையும் கொடுமைப்படுத்தும் கேரக்டரில் இவர் நடித்திருந்ததால் இவரது உண்மையான நடிப்பை உண்மை என நம்பிய தனுஷ் ரசிகர்கள் சிலர் அவரது மொபைல் போனுக்கு திட்டி மெசேஜ்களை அனுப்பி திட்டி வருவதாக கூறப்படுகிறது

இதனால் அதிர்ச்சி அடைந்த நட்டி நட்ராஜ் தான் அந்த கேரக்டரில் தான் நடித்துள்ளதாகவும் உண்மையில் தான் தனுஷின் நண்பர் என்றும் கூறி சமாதானப் படுத்தும் வகையில் ஒரு டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த ட்வீட்டில் கூறியிருப்பதாவது

என்ன திட்டதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்…கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்..phone messagela..திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி…

 

Trending

Exit mobile version