சினிமா செய்திகள்

’நாட்டாமை’ படத்தில் மிக்சர் தந்தைக்கு மகளாக நடித்தவரா இவர்? வைரல் புகைப்படம்!

Published

on

சரத்குமார், மீனா, குஷ்பு உள்பட பலரது நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ’நாட்டாமை’. தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் படங்களில் இதுவும் ஒன்று என்பதும் இந்த படம் மிகப்பெரிய லாபத்தை தயாரிப்பாளருக்கு தந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் இந்த படத்தில் கவுண்டமணிக்கு பெண் பார்க்க வரும் காட்சியில் கவுண்டமணி பார்க்க வரும் பெண்ணாக நடித்து இருத்தவர் கீர்த்தி நாயுடு. இவரது தந்தை அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதே தெரியாமல் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார் என்பதும், இந்த பெண்ணின் தாயார் தன்னுடைய முன்னாள் காதலி என கவுண்டமணியின் தந்தை செந்தில் சொல்வார் என்பதால் இந்த திருமணம் நடக்காது என்ற காமெடி காட்சி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘நாட்டாமை’ கீர்த்தி நாயுடு, கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய லிங்கா, அஜீத்தின் பில்லா, கார்த்தியின் சுல்தான் உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்தி நாயுடு அவ்வப்போது தனது குடும்பத்தின் புகைப்படங்களையும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவார் என்பதும் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வரலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவரது புகைப்படம் ஒன்று மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ‘நாட்டாமை’ படத்தில் இருக்கும் புகைப்படமும் இந்த புகைப்படத்தில் சேர்ந்து பதிவு செய்துள்ள நிலையில் ’நாட்டாமை’ படத்தில் நடித்தவரா இவர்? என பலரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version