இந்தியா

நாளை மறுநாள் நாடு முழுவதும் நீட் தேர்வு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Published

on

இந்தியா முழுவதிலும் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவக் கல்விக்கான இடம் கிடைக்கும். இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு என தனித் தனியாக நீட் தேர்வு நடைபெறுகிறது.

நீட் தேர்வு

இளங்கலை மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) மே மாதம் 7 ஆம் தேதி அன்று, பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதிலும் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். இதில் தமிழ்நாட்டில் சுமார் 1½ இலட்சம் மாணவ மாணவிகள் ஆன்லைன் வழியாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

‘நீட்’ தேர்வானது ஆங்கிலம், அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், இந்தி, மலையாளம் மற்றும் தமிழ் உள்பட சுமார் 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை தேசியத் தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதனை விண்ணப்பதாரர்கள் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நீட் தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நீட் தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version