இந்தியா

ஏப்ரல் 1-ம் தேதி டோல் கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

Published

on

ஏப்ரல் 1-ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்க கட்டணத்தை உயர்த்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஆண்டுக்கு ஒரு முறை தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்க கட்டணத்தை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள 566 சுங்கச் சாவடிகளில் 48 தமிழ்நாட்டில் உள்ளன. இந்நிலையில் 4 சக்கர வாகனங்களுக்கான சுங்க கட்டணத்தை 5 சதவிகிதமும், லாரிகள், டிரக்குகள் சுங்க கட்டணத்தை 10 சதவிகிதம் வரையும் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைத் துறை பரிந்துரைத்துள்ளது.

மார்ச் 15-ம் தேதி நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்திடம் சுங்க கட்டணத்தை உயர்த்துவதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதற்கு ஒப்புதல் கிடைத்த பிறகு ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த கட்டணம் உயர்வு அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு செலவு அதிகரிப்பு மற்றும் புதிய சாலைகளை அமைக்கும் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

டோல் கட்டணம் உயர்ந்தால் லாரி வாடகை கட்டணங்கள் அதிகரித்து, அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version