உலகம்

நியூட்ரினோ திட்டம்.. இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

Published

on

டெல்லி: தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பூவுலகின் நண்பர்கள் இந்த சுற்றுசூழல் அனுமதிக்கு எதிராக வழக்கு தொடுத்தனர். பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் இதற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார்.

அவர் தொடுத்த வழக்கில் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேசமயம் தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க சுற்றுசூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதிக்கு இப்போது தடை விதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது. மத்திய அரசின் சுற்றுசுழல் அனுமதியில் தலையிட  முடியாது என்று கூறியுள்ளது.

வழக்கு விசாரணை முடியும் வரை இந்த திட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version