உலகம்

நியூட்டிரினோவிற்கு அனுமதி வழங்கும் முடிவில் பசுமை தீர்ப்பாயம்.. என்ன நடக்கிறது?!

Published

on

டெல்லி: தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வகம் திட்டம் எப்போது வேண்டுமானாலும் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறத.

இந்த திட்டத்திற்கு இடைக்கால தடை மட்டுமே விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை இரண்டு மாதங்களுக்குள் முடிந்துவிட வாய்ப்புள்ளது. அதுவரை மட்டுமே திட்டத்தை தொடங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தேசிய வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சகத்திடம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வாங்க வேண்டும், வனவிலங்கு பாதிக்குமா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சகம் மத்திய அரசுடையது என்பதால் 100 சதவிகிதம் இந்த திட்டத்திற்கு தேசிய வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு மாதங்களுக்குள் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்த இடைக்கால தடை நீக்கப்படும் என்று கூறப்படுகிறது. .

இதனால்தான் உச்ச நீதிமன்றம் செல்ல பூவுலகின் நண்பர்கள் அமைப்பு முடிவெடுத்துள்ளது.

 

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version