சினிமா செய்திகள்

தேசிய விருதுகள் அறிவிப்பு – மகா நடிகை கீர்த்தி சுரேஷ்!

Published

on

66வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக 3 மாதங்கள் தாமதமாக தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தெலுங்கில் மகாநடி மற்றும் தமிழில் நடிகையர் திலகம் படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

96 படத்தில் த்ரிஷா, ஐரா படத்தில் நயன்தாரா மற்றும் கனா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பாக நடித்திருந்தாலும், சாவித்ரியை கண் முன்னே காட்டிய பவர்ஃபுல் பெர்ஃபார்மன்ஸ்க்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருதை முதன்முறையாக தட்டிச் சென்றுள்ளார்.

பத்மாவத் படத்தில் அலாவுதின் கீல்ஜியாக நடித்த ரன்வீர் சிங்கிற்கு சிறந்த நாயகன் விருது கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட உரி படத்தில் நடித்த விக்கி கவுஷல் மற்றும் அந்தாதுன் படத்தின் நாயகன் ஆயுஷ்மான் குரானாவிற்கு சிறந்த நடிகர்கள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த சண்டை மற்றும் கிராபிக்ஸ் என இரு விருதுகளையும் கே.ஜி.எஃப் படமே தட்டிச் சென்றுள்ளது. 2.0 படத்திற்கு கிராபிக்ஸ் விருது கூட கிடைக்கவில்லை.

சிறந்த தமிழ் படமாக இன்னும் திரையரங்குகளில் வெளிவராத பாரம் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தை பிரியா கிருஷ்ண சுவாமி இயக்கியுள்ளார். கடந்த ஆண்டும் இதே போல டுலெட் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. ஆனால், அதன் பின்னர் தான் படம் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version