சினிமா செய்திகள்

தேசிய விருது வென்ற டுலெட் டிரைலர் ரிலீஸ்!

Published

on

ழ சினிமா தயாரிப்பில் செழியன் இயக்கத்தில் உருவான டுலெட் படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகாத நிலையிலும், கடந்த ஆண்டு சிறந்த படம் என்ற தேசிய விருதினை டுலெட் வென்றது. மேலும், உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட சர்வதேச விருது விழாக்களில் இந்த படம் திரையிடப்பட்டது. 84 முறை பரிந்துரைக்கப்பட்டு, 32 விருதுகளையும் அள்ளிக் குவித்துள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி திரைக்கு வருகிறது.

வாடகை வீட்டில் வசிக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஒருவரின் வாழ்க்கையும், ஏழ்மையும், சென்னையில் வீடு தேடும் கொடுமையும் என சாமானியர்களின் வாழ்க்கையை கலைப்படைப்பாக மாற்றி செழியன் உணர்ச்சிகளை கிளறிவிட்டு விருதுகளை குவித்து வருகிறார்.

எளிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், இத்தனை விருதுகளை குவித்து தமிழக ரசிகர்கள் பார்வைக்கு விருந்தளிக்க வருகிறது.

இதன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் ஆர்யா என பலரும் இந்த படத்தின் டிரெய்லர் லிங்கை ஷேர் செய்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version