தமிழ்நாடு

செந்தில் பாலாஜியை போல நத்தம் விஸ்வநாதன் திமுகவுக்கு செல்வாரா?

Published

on

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். அமமுகவில் இருந்து திமுகவில் அவர் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வந்தது.

திமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட செந்தில் பாலாஜி, பின்னர் கூறுகையில், அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் விரைவில் திமுகவில் இணையவுள்ளதாக கூறியதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் திமுகவில் இணைய உள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில்

இந்நிலையில் நத்தன் விஸ்வநாதன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எந்தக் காலத்திலும் நான் திமுகவிற்கு செல்லமாட்டேன். என்னை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்படுபவர்கள் அவமானப்படுவர். சுயமரியாதையை விற்று, அந்த ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம். ஒருபோதும் நான் திமுக பக்கம் போகமாட்டேன் என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version